Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19ஆல் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் வீடு திரும்பினர்; குணமடைந்தோர் எண்ணிக்கை 58 ஆனது

சிங்கப்பூரில் COVID-19ஆல் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19ஆல் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் வீடு திரும்பினர்; குணமடைந்தோர் எண்ணிக்கை 58 ஆனது

(படம்: Gaya Chandramohan/ CNA)

சிங்கப்பூரில் COVID-19ஆல் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 58 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே வேளையில் கொரோனா கிருமி மேலும் ஒருவருக்குத் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் 58 வயது சிங்கப்பூர்ப் பெண்.

அவர் அண்மையில் சீனா செல்லவில்லை.

ஆனால் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிப்ரவரி 14 அன்று உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் பெண் தொடர்பில் இருந்தார்.

ஜனவரி 23 அன்று நோய்க்கான அறிகுறிகள் பெண்ணிடம் தென்படத் தொடங்கின.

பிப்ரவரி 1, 6, 10 ஆகிய தேதிகளில் அவர் மருந்தகத்திற்குச் சென்றிருந்தார்.

ஏற்கனவே கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர் என்பதால் பிப்ரவரி 18 அன்று அவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்திற்கு
அனுப்பப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

அவர் பெரும்பாலும் ரிவர்டேல் டிரைவில் உள்ள தம் வீட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மொத்தம் 91 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்