Images
  • 50 States Baby
    (படம்: Cindy Lim/Twitter)

அமெரிக்காவின் 50 மாநிலங்களையும் சுற்றிவந்த 5 மாதக் குழந்தை


சொந்த நாட்டிலுள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உண்டா ?

இந்தத் தாயாரின் அந்த ஆசை நிறைவேற வழிவகுத்தது அவரது 5 மாதக் குழந்தை.

சிண்டி லிம் (Cindy Lim) மே மாதத்தில் குழந்தை ஹார்ப்பர் யீட்ஸை (Harper Yeats) ஈன்றெடுத்தார்.

தமது மகப்பேற்று விடுப்பை வீணே கழிக்காமல் அதனை அமெரிக்காவின் 50 மாநிலங்களுக்கும் சென்று சுற்றிப்பார்க்க அவர் பயன்படுத்திக் கொண்டார்.

ஹார்ப்பர் பிறந்த எட்டே வாரங்களில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சிண்டியும் அவரது கணவரும் அமெரிக்காவை காரில் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டனர்.

அந்தத் தகவல் வேகமாகப் பரவி, பலரும் அதற்கு வாழ்த்துக் கூறினர்.

சிலர் பச்சைக் குழந்தையை இந்தப் பாடு படுத்தலாமா என்றும் சினமடைந்தனர்.

சிண்டி அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படவில்லை.

அவரது விடாமுயற்சியால், அமெரிக்காவின் 50 மாநிலங்களையும் கண்ட ஆக இளையவரானார் ஹார்ப்பர்!

அதுவும் ஒவ்வொரு மாநிலத்திலும் குழந்தை ஹார்ப்பரை வைத்துப் பெற்றோர் இருவரும் எடுத்த படங்கள் கொள்ளை அழகு !



 

Top