Images
  • handphone
    (படம்:Pixabay)

சீனா: 6G தொழில்நுட்பத்திற்கான ஆய்வு ஆரம்பம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனா 6G என்னும் ஆறாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளுக்கான தொழில்நுட்பம் குறித்து ஆராயத் தொடங்கியுள்ளது. கம்பியில்லாப் புத்தாக்கத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அது கருதப்படுகிறது.

தேசிய அளவில் 6G தொழில்நுட்பத்தை நிறுவும் இலக்கில் சீன அரசாங்க அமைச்சுகளும் ஆய்வு நிறுவனங்களும் கைகோத்துள்ளன.

அதற்காக ஆய்வு, மேம்பாட்டுக் குழு ஒன்றும் அமைக்கப்படும் என்று Science and Technology நாளேடு தெரிவித்தது.

உலகம் முழுவதும் 5G என்னும் ஐந்தாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளைத் தொடங்க நாடுகள் போட்டி போட்டு வருகின்றன.

4G தொழில்நுட்பத்தை விட அவை குறைந்தது 20 மடங்குத் தரவு வேகத்தை வழங்கும் ஆற்றல் கொண்டது.

மிகை மெய்நிகர்த் தொழில்நுட்பம், தானியக்க வாகனங்கள் ஆகியவற்றை இயக்க 5G தொழில்நுட்பம் பெரிதும் துணை நிற்கிறது.


Top