Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகின் மிகவும் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

சிங்கப்பூர், உலகின் மிகவும் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர், உலகின் மிகவும் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Transparency International அமைப்பு வெளியிட்ட 2017ஆம் ஆண்டுக்கான ஊழல் கண்ணோட்டம் பற்றிய குறியீட்டில், அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

180 நாடுகள் பங்கேற்ற அந்த ஆய்வில், சிங்கப்பூர் 84 புள்ளிகள் பெற்று ஆறாவது நிலையைப் பிடித்தது.

உலக அளவில், அரசாங்கத் துறையில் நிலவும் ஊழல் பிரச்சினைகளை, அந்தக் குறியீடு மதிப்பிட்டது.

அதன்படி, பூஜ்ஜியம் புள்ளி அதிக ஊழல் தன்மையையும், நூறு புள்ளிகள் ஊழல் அறவே அற்ற தன்மையையும் புலப்படுத்தும்.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் வந்தது.

முதல் இடத்தில் வந்த நியூசிலந்து, 89 புள்ளிகளைப் பெற்றது.

அந்த அறிக்கையின் முடிவுகள் பற்றிக் கருத்துரைத்த லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு, சிங்கப்பூரில் ஊழல் குற்றங்கள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன என்று தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்