Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

7-Eleven கிளைகளில் EZ-Link அட்டைகளில் பணம் நிரப்பும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

7-Eleven கிளைகளில் EZ-Link அட்டையில் பணம் நிரப்பும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
7-Eleven கிளைகளில் EZ-Link அட்டைகளில் பணம் நிரப்பும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

(படம்: Wikicommons / Calvin Teo)

7-Eleven கிளைகளில் EZ-Link அட்டையில் பணம் நிரப்பும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் Wirecard சேவைகள் அண்மையில் நிறுத்தப்பட்டது. அதன் மூலம்தான், 7-Eleven கிளைகளில் EZ-Link அட்டைகளில் பணம் நிரப்பப்பட்டு வந்தது. எனவே அந்தச் சேவை அங்கு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக EZ Link பேச்சாளர் கூறினார்.

விரைவில் EZ-Link பணம் நிரப்பும் சேவைகளை மீண்டும் 7-Eleven கிளைகளில் தொடங்க முயற்சி எடுத்துவருவதாக அவற்றை நிர்வகிக்கும் Dairy Farm குழுமம் தெரிவித்தது.

Wirecard நிறுவனம் சிங்கப்பூரின் அதன் கட்டணச் சேவைகளை நிறுத்தி, இம்மாதம் 14ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திரும்ப கொடுக்குமாறு சிங்கப்பூர் நாணய ஆணையம் உத்தரவிட்டது.

சுமார் மூன்று பில்லியன் வெள்ளி பணத்தைக் கணக்கில் காட்டத் தவறிய ஜெர்மானிய நிறுவனம் Wirecard ஜூன் மாதத்தில் சரிந்தது.

EZ-Link வாடிக்கையாளர்கள் செயலி மூலமாக அட்டைகளில் பணம் நிரப்பலாம் என்று EZ-Link நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் 7-Eleven கிளைகளில் EZ-Link சேவைகளை மீண்டும் தொடங்க முனைவதாகவும் அது தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்