Images
  • school

நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்க 7,500 பிள்ளைகளுக்கு இலவசமாக சவர்க்காரம்

தென்மேற்கு வட்டாரத்தில் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 7,500 பிள்ளைகளிடையே நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்க, அவர்களுக்கு இலவசமாகக் கை கழுவுவதற்கான சவர்க்காரம் வழங்கப்படவிருக்கிறது.

COVID-19 கிருமிப்பரவல் சூழலில், முறையாகக் கைகளைக் கழுவுவதைக் கற்றுக்கொடுக்கவும் முனைகிறது, அந்த Safe Schools இயக்கம்.

தென்மேற்குச் சமூக மேம்பாட்டு மன்றமும், Procter & Gamble நிறுவனமும் இணைந்து அந்த இயக்கத்தை வழிநடத்துகின்றன.

உலகக் கை கழுவும் தினத்தை முன்னிட்டு, லியன் ஹூவா தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு முறையாகக் கை கழுவுவதற்கான வழிகள் பற்றிக் கற்றுக்கொடுக்கப்பட்டது.

கிருமிப்பரவலைத் தடுக்க தூய்மையைக் கடைப்பிடிப்பதும், கைகளை முறையாகக் கழுவுவதும் மிக அவசியம் என்பதைத் தென்மேற்குச் சமூகமன்ற மேயர் லோ யென் லிங் (Low Yen Ling) வலியுறுத்தினார்.

Top