Images
  • 7-11 stores
    படம்: Monica Kotwani

18 வயதுக்குக் குறைவானோருக்குச் சிகரெட் விற்ற குற்றச்சாட்டின்பேரில் 7-Eleven கடை மீது நடவடிக்கை

18 வயதுக்குக் குறைவானோருக்கு சிகரெட் விற்ற குற்றச்சாட்டின்பேரில் சுகாதார அறிவியல் ஆணையம் சில சில்லறை விற்பனைக் கடைகள்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

சீமெய் வட்டாரத்திலுள்ள 7-Eleven கடை ஒன்றும் அவற்றில் அடங்கும்.

13 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சிகரெட் விற்றதாக அவற்றின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

டெக் வய் லேனில் அமைந்துள்ள முகமது புஹாரி சில்லறைக் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதாக ஆணையம் கூறியது.

அந்தக் கடை பள்ளிச் சீருடையிலிருந்த 17 வயது மாணவருக்குச் சிகரெட் விற்றது அதற்குக் காரணம்.

மற்ற கடைகளின் புகையிலை விற்பனை உரிமம் 6 மாதங்களுக்குத் தற்காலிகமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. அவை முதன்முறையாக 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சிகரெட் விற்றதாக ஆணையம் தெரிவித்தது.

18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சிகரெட் விற்பவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 5,000 வெள்ளி வரை அபராதமும், இரண்டாம் முறை குற்றம் புரிவோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும் அவர்களுக்கு சிகரெட் வாங்கிக் கொடுப்பவர்களுக்கும் முதல்முறை குற்றத்திற்கு 2,500 வெள்ளியும் இரண்டாம் முறை குற்றத்திற்கு 5,000 வெள்ளி வரையும் அபராதம் விதிக்கப்படலாம்.


Top