Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களிடையே வெளிநாடுகளில் தென்படும் 7 வகை கொரோனா கிருமி

சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களிடையே வெளிநாடுகளில் தென்படும் 7 வகை கொரோனா கிருமி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களிடையே வெளிநாடுகளில் தென்படும் 7 வகை கொரோனா கிருமி

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் சென்ற வாரம் சமூக அளவில், மொத்தம் 60 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

அவர்களில் பலருக்கு வெளிநாடுகளில் காணப்படும் உருமாறிய கிருமி வகை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது குறித்து, இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு விவரம் அளித்தது.

நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களில்.....

  • உருமாறிய B.1.351 வகைக் கிருமி (தென்னாப்பிரிக்கா) - 8 பேர்
  • உருமாறிய B.1.1.7 வகைக் கிருமி (பிரிட்டன்) - 7 பேர்
  • உருமாறிய B.1.617.2 வகைக் கிருமி (இந்தியா) - 7 பேர்
  • உருமாறிய P1 வகைக் கிருமி (பிரேசில்) - 3 பேர்
  • உருமாறிய B.1.617.1 வகைக் கிருமி (இந்தியா) - 3 பேர்
  • உருமாறிய B.1.525 வகைக் கிருமி (பிரிட்டன் 2) - ஒருவர்
  • உருமாறிய B.1.351 (தென்னாப்பிரிக்கா) - மீண்டும் ஏற்பட்ட தொற்று - 4 பேர்
  • B.1.617.2 என்ற இந்தியாவில் தோன்றிய உருமாறிய வகைக் கிருமி தொற்றிய 7 பேர், 3 குழுமங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் அந்தக் குழுமங்களுக்கு இடையே எந்தத் தொடர்பும் இல்லை.

பாதிக்கப்பட்டோரில் ஐவர் டான் டொக் செங் மருத்துவமனைக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒருவர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரி.

மற்றொருவர் துவாஸ் சௌத் சமூகப் பரமாரிப்பு வசதியின் துப்புரவாளர்.

உருமாறிய புதிய வகைக் கிருமிகள் பரவாமல் தடுக்க, தேவையான பொதுச் சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்