Images
  • mohan
    ( படம்: Wong Peiting/TODAY )

765 வெள்ளி செலவிட்டு ஷங்ரிலாவில் ஒரு நாள் தங்கிய டிரம்ப் ரசிகர்

சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மலேசிய ஆடவர் ஒருவர் ஷங்ரிலா ஹோட்டலில் 765 வெள்ளி கட்டணம் செலுத்தி ஒரு நாள் தங்கியுள்ளார்.

திரு டிரப்பை ஒரு முறையாவது நேரில் காணவேண்டும் என்று நேற்றிரவிலிருந்து முயன்று வந்துள்ளார் மகராஜ் மோகன். அதிபர் டிரம்ப்பின் வாகனத்துடன் மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது.

காலை 6.30 மணியிலிருந்து ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில் திரு டிரம்புக்காகக் காத்திருந்தார். நேற்றும் (ஜூன் 11) அதிபர் டிரம்பைக் காண அவர் 5 மணி நேரம் கால்கடுக்கக் காத்திருந்தார். டிரம்ப் எழுதிய Trump: The Art Of The Deal புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது அவரது விருப்பம்.

அதிபர் டிரம்ப் காலை 8 மணிக்கு கப்பெல்லா ஹோட்டலுக்குப் புறப்பட்டபோது சற்று நேரம் அவரைப் பார்த்தார் மோகன்.

ஜொகூரிலிருந்து இரண்டு மணிநேரம் போக்குவரத்து நெரிசலையும் பாராமல் சுமார் 2,000 ரிங்கிட் செலவிட்டு இங்கு வந்தது பலனளித்துள்ளது என்றார் டிரப்பின் பரம ரசிகர்.

டிரம்ப்பின் வெளிப்படையான பேச்சு, எதிலும் துணிச்சலாகச் செயல்படும் குணாதிசயம் தம்மைக் கவர்ந்துள்ளது என்றார் மோகன்.

அதிபர் டிரம்பைச் சந்திக்காவிட்டாலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பெயோவையும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் சாரா ஹக்கபீ சாண்டர்ஸையும் சந்தித்தார் மோகன்.  

உங்கள் கருத்து

Top