Images
  • covid
    (Photo: Gaya Chandramohan)

சிங்கப்பூரில் மேலும் 8 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று; ஒரே நாளில் பதிவாகியிருக்கும் ஆக அதிக எண்ணிக்கை

சிங்கப்பூரில் மேலும் 8 பேருக்குப் புதிதாக COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் ஏற்கனவே நோய் கண்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் காவல்துறையின் உதவியோடு நோய் தொற்றியதற்கான தொடர்பு ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

புதிதாக நோய் தொற்றியவர்களில் ஐவர் Grace Assembly of God தேவாலயத்தில் நோய் தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள்.

இருவர் Seletar Aerospace Heights கட்டுமானத் தளத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருவர், நேற்று உறுதிசெய்யப்பட்ட DBS வங்கி ஊழியரின் குடும்ப உறுப்பினர்.

தற்போது நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை - 58

இன்றைய நிலவரப்படி 15 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உறுதிப்படுத்தப்பட்ட 43 பேர் மருத்துவமனையில் சீரான உடல்நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியில் சுகாதார அமைச்சு தொடர்ந்து ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்தது.

இதுவரை அப்படி 1,278 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


 

Top