Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிதாகக் கிருமி தொற்றியிருக்கும் 8 பேர் - சில விவரங்கள்

புதிதாகக் கிருமி தொற்றியிருக்கும் 8 பேர் - சில விவரங்கள்

வாசிப்புநேரம் -
புதிதாகக் கிருமி தொற்றியிருக்கும் 8 பேர் - சில விவரங்கள்

(Photo: Gaya Chandramohan)

அவர்களையும் சேர்த்து கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆனது. 

சுகாதார அமைச்சு அவர்களது விவரங்களைத் தெரிவித்துள்ளது.

புதிதாகக் கிருமி தொற்றியோரில் ஐவர் Grace Assembly of God தேவாலயத்துடன்
தொடர்புடையவர்கள். ஏற்கனவே அங்கு இருவருக்குக் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது. 


51 ஆவது நபர்

48 வயது சிங்கப்பூரர்.
பிப்ரவரி 4ஆம் தேதி அறிகுறிகள் தோன்றின.
பிப்ரவரி 5, 10 தேதிகளில் பொது மருத்துவரைப் பார்த்தார்.
பிப்ரவரி 11 - நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.
நோய் தொற்றுவதற்கு முன் தேவாலயத்தின் புக்கிட் பாத்தோக், டாங்லின் கிளைகளில் பணிபுரிந்தார்.
பீஷான் ஸ்டிரீட் 13-இல் தங்கியிருக்கிறார். 


53ஆவது நபர்

54 வயது சிங்கப்பூரர்.
பிப்ரவரி 10ஆம் தேதி அறிகுறிகள் தோன்றின.
பிப்ரவரி 12 - தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்துக்குச் சென்றார்.
ஹில்வியூ அவென்யூவில் வசிப்பவர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்.
அறிகுறிகள் தென்பட்ட பிறகு மாணவர்களையோ,

உடன் பணிபுரிபவர்களையோ சந்திக்கவில்லை. 


54, 57, 58 ஆவது நபர்கள்

54 வயது சிங்கப்பூர்ப் பெண், 26 வயது சிங்கப்பூர் ஆடவர், 55 வயது சிங்கப்பூர் ஆடவர்.
மூவரும் தேவாலயச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.
கிருமித்தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் எங்கு சென்றனர், எங்கு தங்கியிருக்கின்றனர் போன்ற மேல்விவரங்கள் இல்லை. 


52 ஆவது நபர்

37 வயது பங்களாதேஷ் ஆடவர்.
Seletar Aerospace Heights கட்டுமானத் தளத்துடன் தொடர்புடையவர்.
பிப்ரவரி 7ஆம் தேதி அறிகுறிகள் தோன்றின.
இவர் ஏற்கனவே நோய் தொற்றிய இருவருடன் தொடர்புடையவர்.
பிப்ரவரி 11ஆம் தேதி அறிகுறிகள் தோன்றின.
நோய் தொற்றுவதற்கு முன்னர் அவர் கட்டுமானத் தளத்தில் பணியாற்றினார்.
கேம்பல் லேனில் தங்கியிருக்கிறார்.


56ஆவது நபர்
30 வயது பங்களாதேஷ் ஆடவர்.
Seletar Aerospace Heights கட்டுமானத் தளத்துடன் தொடர்புடையவர்.
இவர் ஏற்கனவே நோய் தொற்றிய இருவருடன் தொடர்புடையவர்.
தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.


55ஆவது நபர்

30 வயது ஆடவர்.
அண்மையில் சீனா செல்லாதவர்.
நேற்று உறுதிசெய்யப்பட்ட DBS வங்கி ஊழியரின் குடும்ப உறுப்பினர்.


50 ஆவது நபர் பற்றிய மேல்விவரங்களையும் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டது.
62 வயது சிங்கப்பூர் ஆடவர்.
பிப்ரவரி 7ஆம் தேதி அறிகுறிகள் தோன்றின.
பிப்ரவரி 7,10,11 தேதிகளில் மருந்தகங்களுக்குச் சென்றிருக்கிறார்.
பிப்ரவரி 12 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
நோய் தொற்றுவதற்கு முன் அவர் மரினா பே நிதி நிலையத்தில் உள்ள DBS Asia Central -இல் பணிபுரிந்தார்.
மெய் ஹூவான் டிரைவ்-இல் தங்கி இருக்கிறார்.


இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்கள் - 15
சிகிச்சை பெறுவோர் - 43
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர் - 8


நெருங்கிய தொடர்பிருப்பதாக அடையாளம் காணப்பட்டோர் - 1,278
அதில் சிங்கப்பூரில் இருப்போர் - 1,161 (1,144 பேரைத் தொடர்பு கொண்டு தனிமைப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள்; எஞ்சிய 17 பேரை அடையாளம் காண முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன)
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்