Images
  • maritime
    (கோப்புப் படம்: AFP / ROSLAN RAHMAN)

சிங்கப்பூரின் கடல்துறைப் புத்தாக்கத்தை வலுப்படுத்த 80 மில்லியன் வெள்ளி நிதி

சிங்கப்பூரின் கடல்துறைப் புத்தாக்கத்தை வலுப்படுத்த, அடுத்த 5 ஆண்டுகளில் 80 மில்லியன் வெள்ளி செலவிடப்படவிருக்கிறது.

கடல்துறை ஆய்வில், முன்னணி நடுவம் என்ற நாட்டின் நிலையை வலுப்படுத்த அது உதவும்.

இந்த வட்டாரத்தின் முதலாவது பாவனைப் பயிற்சிக் கருவியின் அறிமுகத்தோடு அதுபற்றிய தகவலும் அறிவிக்கப்பட்டது.

பரபரப்பான கப்பல் போக்குவரத்துக்கு இடையே, ஒரு கப்பலைப் பாதுகாப்பாகச் செலுத்துவதில் பயிற்சிபெற உதவுகிறது அந்த பாவனைக் கருவி.

அதன் விலை, 1.2 மில்லியன் வெள்ளி.

மேம்பட்ட வழிகாட்டு ஆய்வு பாவனைக் கருவி என்னும் அத்தகைய பயிற்சி வசதி, தென்கிழக்காசியாவிலேயே இங்குதான் முதலில் நிறுவப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்ப் பலதுறைத்தொழில்நுட்பக் கல்லூரியில் அது அமைந்திருக்கிறது.

மாணவர்களும் கடலோடிகளும் அதில் பயிற்சி பெற்றுத் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.

பயிற்சியின் நிறைவில், இன்னும் சிறந்த முடிவுகளை எவ்வாறு எடுத்திருக்கலாம் என்பதுபற்றிய குறிப்புகளை, பாவனை இயந்திரம் வழங்கும்.

கடல்துறையில், புத்தாக்கத்தை மேம்படுத்தும் வழிகளில் அதுவும் ஒன்று.

கப்பல்துறையில், மின்னிலக்கத்தையும் பசுமை முயற்சிகளையும் உள்ளடக்கிய தீர்வுகளை உருவாக்க, சிங்கப்பூர்க் கடல்துறைக் கல்வி நிலையத்துக்கு 5 ஆண்டுகளில் 80 மில்லியன் வெள்ளி வழங்கப்படும்.  

Top