Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோய்ப்பரவல் இல்லையென அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதியில் ஒருவருக்குக் கிருமித்தொற்று - 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

நோய்ப்பரவல் இல்லையென அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதியில் புதிததாக ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பதாய் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள 800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வாசிப்புநேரம் -

நோய்ப்பரவல் இல்லையென அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதியில் புதிததாக ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பதாய் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள 800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்படும் காலம் நிறைவடையும்போது அந்த ஊழியர்கள் கிருமித்தொற்றுச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வரும் நாள்களில் கிருமித்தொற்று எண்ணிக்கை உயர்ந்து, பின்னர் மெல்லக் குறையும் என்று அமைச்சு கூறியது.

தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள், அவர்கள் தங்கும் விடுதியின் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் CNA மேலும் தகவல்களைக் கேட்டுள்ளது.

புதிய COVID-19 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைக் கண்காணித்து வருவதாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோய்ப்பரவல் அபாயத்தைக் குறைப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள் நாளுக்கு இரு முறை தங்கள் உடல்வெப்பநிலையை FWMOMCare செயலி வழியாகப் பதிவு செய்து தங்களுக்கு நோய் அறிகுறிகள் உள்ளனவா என்று அதன் வழி தெரிவிக்கவேண்டும்.

உடல்நலம் இல்லை எனக் கூறும் ஊழியர்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவர்.

கூடுதல் கிருமிப்பரவல் அபாயம் உள்ள துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 14 நாளுக்கு ஒரு முறை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

புதிய COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ள தங்கும் விடுதிகள் குறித்து மேலும் தகவல் பெற CNA மனிதவள அமைச்சுடன் தொடர்புகொண்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்