Images
  • 81 man

இந்தியாவில் முதியவரைப் போல வேடமிட்டு விமானத்தில் ஏற முயன்ற இளையர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பொதுவாக இளமையான தோற்றத்தைக் கொண்டிருக்கவே பலரும் விரும்புவர்.

ஆனால் 32 வயது ஜெயேஷ் படேல் (Jayesh Patel) 81 வயது முதியவரைப் போல வேடம் பூண்டார்.

போலிக் கடப்பிதழ் மூலம் இந்தியாவிலிருந்து நியூ யார்க்கிற்கு அவர் பயணம் செய்ய முயன்றார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று புது டில்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார் படேல்.

முதியவரைப் போல வேடம் பூண்ட அவர் சக்கர நாற்காலியைக் கொண்டு முதற்கட்ட பாதுகாப்பு, குடிநுழைவுச் சோதனைகளைக் கடந்துவிட்டாராம்.

ஆனால் தள்ளாமை காரணமாகத் தன்னால் எழுந்து நிற்கமுடியாது என்றுகூறிப் படேல், பாதுகாப்புச் சோதனைகளைத் தவிர்க்க முயன்றபோது அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்ததாம்.

உரிய முறையில் விசாரித்தபோது படேலின் சாயம் வெளுத்தது.

விசாரணைகள் தொடர்கின்றன.  


Top