Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

95 வயது மூதாட்டியைக் கொன்றதாகப் பணிப்பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

95 வயது மூதாட்டியைக் கொன்றதாகப் பணிப்பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

வாசிப்புநேரம் -
95 வயது மூதாட்டியைக் கொன்றதாகப் பணிப்பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

கோப்புப் படம்: TODAY

சிங்கப்பூரில், 95 வயது மூதாட்டியைக் கொன்றதாக மியன்மாரைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

34 வயது சன்டர் டூ (Sandar Htoo), Recreation ரோட்டில் உள்ள வீட்டில் திருவாட்டி ஆங் பெக் சாய்யைக்(Ang Pek Chai) கொன்றதாக நம்பப்படுகிறது.

அந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் மணி 12.40லிருந்து 1.18 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகளுக்கு அன்றே தகவல் கிடைத்ததாகவும், அதிகாரிகள் அந்த வீட்டிற்குச் சென்றபோது 95 வயது மாது அசைவின்றிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்