Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வழக்குரைஞராக வேலை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டவருக்கு மீண்டும் அனுமதி

வழக்குரைஞராக வேலை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வழக்குரைஞராக வேலை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டவருக்கு மீண்டும் அனுமதி

படம்: TODAY

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

வழக்குரைஞராக வேலை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரபல Rajan and Tan நிறுவனத்தில் வேலை செய்த 51 வயது திரு. சோய் சீ இயோன் (Choy Chee Yuan) மீது 2008ஆம் ஆண்டில் ஹாங்காங் ஹோட்டலில்  திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு மனச்சோர்வுக்கு ஆளான அவர் தாமாகவே வழக்குரைஞராக வேலை செய்வதை நிறுத்திக்கொண்டார்.

ஈராண்டுக்குப் பிறகு அதிகாரபூர்வமாக அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

நேற்று 3 நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றக் குழு, திரு. சோயின் நிலைமை விதி விலக்குக்கு உரியது என்று முடிவெடுத்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்குரைஞராகப் பணியாற்ற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்