Images
  • a level
     (Photo: MOE)

GCE A நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு முடிவுகள் (GCE A நிலை) இம்மாதம் 21ஆம் தேதி வெளியிடப்படும்.

மாணவர்கள் அன்றைய தினம் பிற்பகல் இரண்டரை மணிமுதல், முடிவுகளைத் தத்தம் பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

COVID-19 கிருமிப் பரவல் காரணமாகப் பள்ளிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளன.

மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னர், தங்கள் பயண விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்; மேலும் வெப்பநிலையையும் சோதித்துக்கொள்ளவேண்டும்.

மாணவர்கள் சிறு குழுக்களாக வகுப்பறைகளில் முடிவுகளைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய மாணவர்கள் மட்டுமே பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

கட்டாய விடுப்பில் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. அவர்கள் தங்கள் முடிவுகளை இணையம்வழி பெற்றுக்கொள்வர். அண்மையில் சீனாவுக்கோ, சீனா வழியாகவோ பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கும் அது பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்தது.

தனிப்பட்ட முறையில் தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளை அஞ்சல் வழி பெற்றுக்கொள்வர்.

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற அல்லது நிரந்தரவாசியாக உள்ள மாணவர்கள் சான்றிதழை இந்த ஆண்டு முதல், மின்னிலக்க முறையில் பெறவிருக்கின்றனர்.  

Top