Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முகக் கவசத்தை அணியாமல் வெளியே சென்றதாக ரஷ்ய ஆடவரின்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் முகக் கவசத்தை அணியாமல் வெளியே சென்றதாக 40 வயது ரஷ்ய ஆடவரின்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் முகக் கவசத்தை அணியாமல் வெளியே சென்றதாக 40 வயது ரஷ்ய ஆடவரின்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அது உட்பட அவரின்மீது 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. காவல்துறை அதிகாரியிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது, Orchard Plazaவில் ஆடவரின்மீது எச்சில் உமிழ்ந்தது ஆகியவை பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் இவ்வாண்டு மே மாதத்திற்கும் இடையில் அந்தச் சம்பவங்கள் நடந்தன. அவற்றில் மூன்று, நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தின்போது நடந்ததாகக் கூறப்பட்டது.

COVID-19 தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக அவரின்மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.

லாரியோனோவ் ஆண்ட்ரே (Larionov Andrei) தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 11ஆம் தேதி அவர் மீண்டும் விசாரணைக்காக நீதிமன்றத்திற்குத் திரும்புவார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்