Images
  • A&W
    படம்: Matthew Mohan

A&W விரைவு உணவகத்தின் 2ஆவது கிளை 2 மாதங்களில்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

A&W விரைவு உணவகம் 2 மாதங்களில் தனது 2ஆவது கிளையைத் திறக்கவிருக்கிறது.

சாங்கி விமான நிலையத்தின் ஜுவெல் வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது அதன் முதல் கடை.

A&W விரைவு உணவகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூருக்குத் திரும்பியுள்ளது.


அது முதன்முதலில் 1966ஆம் ஆண்டு இங்கு  செயல்படத் தொடங்கியது.

ஆனால், 5 கடைகளோடு செயல்பட்டுவந்த அது 2003ஆம் ஆண்டில் எல்லாக் கடைகளையும் மூடியது.

இம்முறை, சிங்கப்பூரை விட்டுச் செல்லப்போவதில்லை என்றது உணவகம்.

A&W விரைவு உணவகத்தின் 2ஆவது கடை, அதிக மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில், ஜூன் மாதம் திறக்கப்படுமென அதன் அனைத்துலகத் தொடர்புத்துறை இயக்குநர் கெல்வின் டான் தெரிவித்தார்.

மேலும், A&W உணவகத்துக்கு ஹலால் சான்றிதழ் பெறும் நோக்கில்,  சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்திடம் விண்ணப்பிக்கும் எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Top