Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கணக்குச் சவால்களைச் சமாளிக்கத் துடிக்கும் சிங்கப்பூர்ச் சிறுமி

கணக்குச் சவால்களைச் சமாளிக்கத் துடிக்கும் சிங்கப்பூர்ச் சிறுமி 

வாசிப்புநேரம் -

ஆருஷி மகேஷ்வரி - சிங்கப்பூரின் சிறந்த கணக்குத் திறனாளர்களில் ஒருவர். பல்கலைக்கழகக் கணக்கைக் கூட நொடிகளில் முடிக்கும் இவருக்கு வயது 11.

"Cheryl's Birthday" கணக்கு நினைவிருக்கிறதா? 2015-ஆம் ஆண்டு 14 வயதுப் பிள்ளைகள் கலந்துகொள்ளும் ஒலிம்பியாட்டில் கேட்கப்பட்ட கேள்வி. பலரையும் சிந்திக்க வைத்த கேள்வி. ஆருஷி அதை 9 வயதில் செய்து காட்டினார்.

ஆருஷிக்கு 4 வயதாக இருந்தபோது, கணக்கிலும், சதுரங்க விளையாட்டிலும் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டுபிடித்தனர் பெற்றோர்.

தொடர்ந்து சவால்களைத் தேடத்தொடங்கினார் ஆருஷி. ஒவ்வொன்றிலும் வெற்றி. 7 வயதில் சதுரங்க வெற்றியாளர்.

ஆருஷியின் அண்ணன் 13 வயது அருணவும் கணக்கில் கைதேர்ந்தவர். சகோதரியைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறார்.

இருப்பினும், ஆருஷி தனது பிள்ளைப்பருவ மகிழ்ச்சிகள் எதையும் இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கின்றனர் பெற்றோர்.

மீடியாகார்ப்பின் On the Red Dot நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் ஆருஷி தனது ஆர்வங்களைப் பகிர்ந்துகொண்டார்.

எங்கும் எதிலும் கணக்கு இருப்பதை உணர்வதாகச் சொன்னார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்