Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பசுமை நிதிச்சூழல் - விரைவாக நடைமுறைப்படுத்த 2 பில்லியன் டாலர் திட்டம்

பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் கடுமையாகி வருகிறது. சிங்கப்பூர் அதனைச் சமாளிக்க தனது பசுமை நிதிச்சூழலை விரைவாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
பசுமை நிதிச்சூழல் - விரைவாக நடைமுறைப்படுத்த 2 பில்லியன் டாலர் திட்டம்

(படம்: AFP/ROSLAN RAHMAN)

பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் கடுமையாகி வருகிறது. சிங்கப்பூர் அதனைச் சமாளிக்க தனது பசுமை நிதிச்சூழலை விரைவாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்காக சிங்கப்பூர் நாணய வாரியம் 2 பில்லியன் டாலர் மதிப்புமிக்க திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

அதன்மூலம், வளர்ச்சித் திட்டங்களுக்கான முதலீட்டைப் பெருக்கமுடியும்.

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காமல் நீடித்த வளர்ச்சியைக் கொண்ட பொருளியலை உருவாக்கவேண்டும். அதற்குத் திட்டம் உதவியாக இருக்கும்.

பசுமை முதலீட்டுத் திட்டம் என்று அது அழைக்கப்படுகிறது. அதுபற்றி, கல்வி அமைச்சரும் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு ஓங் யீ காங் நிதித் தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்தார். அனைத்துலகப் பசுமை நிதி முயற்சிகளுக்காக100 மில்லியன் டாலர் ஒதுக்கப்படும்.

அந்தத் திட்டத்தின்கீழ் பசுமை நோக்கம் கொண்ட முதலீட்டு உத்திகளுக்கு வாரியம் நிதி ஒதுக்குமெனத் திரு. ஓங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் பசுமை நிதி நடவடிக்கைகளையும் ஆற்றலையும் வலுப்படுத்த, சொத்து நிர்வாகிகள் உறுதி தெரிவித்திருப்பதாய் அவர் சொன்னார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்