Images
  • Cyclist Problem
    (படம்: Facebook / Roads.sg)

போக்குவரத்து விதிகளை மீறும் சைக்கிளோட்டிகளுக்குத் தண்டனை உள்ளதா?

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்குச் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

உதாரணத்துக்கு, சாலை சமிக்ஞைகளைப் பின்பற்றாமல், பிறரின் பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் சாலையைப் பயன்படுத்தும் சைக்கிளோட்டிகள் சட்டப்படி தண்டிக்கப்படலாம் என்பதைத் தெரிவித்தார் அமைச்சர்.

அவ்வாறு முதன்முறை குற்றம் புரிபவர்களுக்கு 1,000 வெள்ளிவரை அபராதமோ, 3மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அவ்வாறு மீண்டும் குற்றம் புரிவோருக்கு 2,000 வெள்ளி வரை அபராதமோ 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அதே வேளையில் சைக்கிளோட்டிகள், பாதசாரிகள் என மற்ற சாலைப் பயனீட்டாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு செயல்படுமாறு வாகனமோட்டிகளை அமைச்சர் சண்முகம் கேட்டுக்கொண்டார்.  

Top