Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 66 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சிங்கப்பூரில் COVID-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 66 நிறுவனங்கள் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் COVID-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 66 நிறுவனங்கள் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வேலையிடப் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் குறித்து 3,500க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்ற அமைச்சு அந்நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதலாளிகள், ஊழியர்களைத் தொடர்ந்து வீட்டிலிருந்தபடி வேலைசெய்வதற்கு அனுமதித்திருந்தால், சில புகார்களைத் தவிர்த்திருக்கலாம் என அமைச்சு சுட்டியது.

அமைச்சுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான புகார்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்க அனுமதிக்கப்படாதது பற்றியவை.

கட்டுப்பாடு விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது செயல்பாடுகளை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்