Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

GetActive! Singapore விழா ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கிறது

சிங்கப்பூரின் விளையாட்டுப் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் GetActive! Singapore விழா ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் விளையாட்டுப் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் GetActive! Singapore விழா ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

இருநூறாம் ஆண்டு நிறைவு அனுசரிப்பின் ஒரு பகுதியாக இவ்வாண்டு விழா அமையும்.

பெஸ்டா சுக்கன் (Pesta Sukan) எனும் 60களின் பிரபலமான விளையாட்டு விழாவும் புத்துயிர் பெறவுள்ளது.

மெர்டேக்கா தலைமுறையினருக்கு அங்கீகாரம் வழங்குவது நோக்கம்.

கடல்நாகப் படகுப் போட்டி, சைக்கிளோட்டம் போன்ற பலருக்கும் பழக்கப்பட்ட விளையாட்டுகள் இடம்பெறும்.

பலருக்கும் அவர்களின் இளைமைப் பருவத்தை மீண்டும் கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி அது.

YouthCreates எனும் புதிய அங்கமும் இவ்வாண்டு
அறிமுகம் காண்கிறது.

விளையாட்டின் மூலம் சமூகத்தில் ஆக்கப்பூர்வமானத் தாக்கத்தை ஏற்படுத்துவது இலக்கு.

பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் அதன் தொடர்பில் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் பரிந்துரைகளுக்கு 50ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளும், மானியங்களும் வழங்கப்படும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்