Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துடிப்பாக மூப்படைவோருக்கு அங் மோ கியோவில் ActiveSG உடற்பயிற்சிக் கூடம்

மூத்த குடிமக்கள் துடிப்பாக மூப்படைய, முதியோரையும் உடல் ஊனமுற்றோரையும் மனதில்கொண்டு இவ்வாண்டு இறுதிக்குள் ஐந்து ActiveSG உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -

மூத்த குடிமக்கள் துடிப்பாக மூப்படைய, முதியோரையும் உடல் ஊனமுற்றோரையும் மனதில்கொண்டு இவ்வாண்டு இறுதிக்குள் ஐந்து ActiveSG உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

மூப்படைந்த வீடமைப்புப் பேட்டைகளில் அதுபோன்ற உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்படுமென்று சென்ற செப்டம்பர் மாதம் பிரதமர் லீ சியென் லூங் அறிவித்திருந்தார்.

சமூக மன்றத்தில் கட்டப்பட்டிருக்கும் முதல் ActiveSG உடற்பயிற்சிக் கூடத்தை இன்று அங் மோ கியோ சமூக மன்றத்தில் அவர் திறந்துவைத்தார்.

பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் அந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு நுழைவுக் கட்டணம் ஒருமுறைக்கு $2.50.

முதியோர் உடற்பயிற்சிக்கான வசதிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க 65 வயதுக்கும் மேலான சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் புதன்கிழமைதோறும் இலவசமாக அந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்னும் மூன்று ActiveSG உடற்பயிற்சிக் கூடங்கள் ஃபெர்ன்வேல் (Fernvale), சென்ஜா-கேஷ்யூ (Senja-Cashew), பெக் கியோ (Pek Kio) போன்ற வட்டாரங்களில் அமைந்திருக்கும்

ஐந்தாவது ActiveSG உடற்பயிற்சிக் கூடம் எங்கே அமைக்கப்படும் என்பது கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்