Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வட்டாரத்தில் அதிகரிக்கும் பயங்கரவாதத்தை எதிர்க்க ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியம்: தற்காப்பு அமைச்சர்

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் பயங்கரவாதச் செயல்கள் அதிகரிக்கும் ஆபத்தை எதிர்பார்த்து, ஆசியான் வட்டார ராணுவங்கள் மேலும் அணுக்கமாகச் செயல்பட அழைப்பு விடுத்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
வட்டாரத்தில் அதிகரிக்கும் பயங்கரவாதத்தை எதிர்க்க ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியம்: தற்காப்பு அமைச்சர்

(படம்: Royal Thai Government / AFP)

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் பயங்கரவாதச் செயல்கள் அதிகரிக்கும் ஆபத்தை எதிர்பார்த்து, ஆசியான் வட்டார ராணுவங்கள் மேலும் அணுக்கமாகச் செயல்பட அழைப்பு விடுத்திருக்கிறார்.

வெளிநாட்டுக் கிளர்ச்சியாளர்கள் தென்-கிழக்காசியாவுக்குத் திரும்பி வருகின்றனர். இந்தச் சூழலில் ஆசியானில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதை அவர் சுட்டினார்.

தாய்லந்தில் 13ஆவது ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பிற்குப் பிறகு டாக்டர் இங் செய்தியாளர்களிடம் பேசினார்.

வேவுத் தகவல்களைத் திரட்டுவதில் மட்டுமின்றி, நகர்ப்புற பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஆசியான் நாடுகள் ஆற்றலைப் பெருக்கிக்கொள்வது முக்கியம் என்றார் அவர்.

அதன் ஒரு பகுதியாக ஆசியான் ராணுவங்கள், சிங்கப்பூர் ஆயுதப் படைப் பயிற்சிக் கழகமான SAFTI Cityயில் பயிற்சி பெற அனுமதிக்கப்படும் என்று டாக்டர் இங் சொன்னார்.

இதற்கிடையே, ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள், கூட்டுப் பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

ஆசியான் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அதன் நோக்கம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்