Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விலங்குத் தோட்டத்தின் பெங்குவின், நீர்யானை உள்ளிட்ட 10 விலங்குகளைப் பொதுமக்கள் தத்தெடுக்கலாம்

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தின் பெங்குவின், நீர்யானை உள்ளிட்ட 10 விலங்குகளைப் பொதுமக்கள்  தத்தெடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
விலங்குத் தோட்டத்தின் பெங்குவின், நீர்யானை உள்ளிட்ட 10 விலங்குகளைப் பொதுமக்கள் தத்தெடுக்கலாம்

படம்: ஷரளா தேவி

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தின் பெங்குவின், நீர்யானை உள்ளிட்ட 10 விலங்குகளைப் பொதுமக்கள் தத்தெடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

“Adopt an Animal” திட்டத்தின் மூலம், விலங்குப் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவை குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கம்.

பிரபல ஓராங் உத்தான் குரங்கு Ah Meng, Psota எனும் நீர்யானை, Ben, Bella பெங்குவின்கள் போன்ற 10 வகையான விலங்குகளைப் பொதுமக்கள் 'தத்தெடுக்கலாம்'. அதற்கென அவர்கள் 200 வெள்ளி முதல் 1,500 வெள்ளி வரை நன்கொடை கொடுக்கலாம்.

திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதி விலங்குகளின் உணவு, மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

நன்கொடை வழங்குவோருக்குச் சான்றிதழும் விலங்குத் தோட்டத்தின் நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பு அழைப்புகளும் வழங்கப்படும்.

இதுவரை திட்டத்தில் சுமார் 200 பேர் பங்குபெற்றுள்ளதாக சிங்கப்பூர் விலங்குத் தோட்டம் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்