Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குழந்தைத் தத்தெடுப்புச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

ஓரின உறவில் உள்ள ஆடவர் குழந்தையைத் தத்தெடுக்க நீதிமன்றம் சம்மதித்தப்பின் அதைக் குறித்த சட்டம் மறுபரிசீலனை செய்யப்படுவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இன்று (ஜனவரி 14) கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
குழந்தைத் தத்தெடுப்புச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

படம்: Unsplash/Liane Metzler

ஓரின உறவில் உள்ள ஆடவர் குழந்தையைத் தத்தெடுக்க நீதிமன்றம் சம்மதித்தப்பின் அதைக் குறித்த சட்டம் மறுபரிசீலனை செய்யப்படுவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இன்று (ஜனவரி 14) கூறியுள்ளது.

பிள்ளைகளின் நலன், பொதுக் கொள்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தத்தெடுப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று  நாடாளுமன்றத்தில் கூறினார்.

சிங்கப்பூரின் கொள்கைகளைச் சரியாகப் பிரதிபலிக்கும் நோக்கில் அந்தச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படுவதாக அவர் விளக்கினார்.

கடந்த ஆண்டு, ஓரின உறவில் உள்ள ஆடவர் ஒருவர் தனது சொந்த மகனைத் தத்தெடுக்கும் வழக்கில் வெற்றி கண்டதை அடுத்து அந்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்