Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Orchard Towers கொலை வழக்கு: இனம் காரணமாகச் சிலருக்குச் சலுகை கொடுக்கப்படுவதாய்ப் பரவும் தகவல் 'பொய்யானது; அடிப்படையற்றது'

Orchard Towers கொலை வழக்கில், இனம் காரணமாகச் சிலருக்குச் சலுகை கொடுக்கப்படுவதாய் சமூக ஊடகத்தில் பரவும் தகவல் 'பொய்யானது; அடிப்படையற்றது என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
Orchard Towers கொலை வழக்கு: இனம் காரணமாகச் சிலருக்குச் சலுகை கொடுக்கப்படுவதாய்ப் பரவும் தகவல் 'பொய்யானது; அடிப்படையற்றது'

(படம்: Reuters/Edgar Su)

Orchard Towers கொலை வழக்கில், இனம் காரணமாகச் சிலருக்குச் சலுகை கொடுக்கப்படுவதாய் சமூக ஊடகத்தில் பரவும் தகவல் 'பொய்யானது; அடிப்படையற்றது என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கூறியுள்ளது.

அந்தப் பதிவுகள் நீதிமன்ற அவமதிப்பாய்க் கருதப்படக்கூடும் என்றும் அவற்றைக் காவல்துறை விசாரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் இனத்தைப் பொறுத்து நீதிமன்றம் தண்டனை விதிப்பதாகவும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அதிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படுவதாகவும் வெளிவரும் கருத்துகள் பெய்யானவை, அடிப்படையற்றவை என்று அலுவலகம் தெரிவித்தது.

திரு. சத்தீஷ் நோயெல் கோபிதாஸின் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேருக்குத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

அந்த 6 பேரும் மாண்டவருக்கு மரணத்தை ஏற்படுத்துவதில் சம்பந்தப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனைகள் குறைக்கப்பட்டன என்று அலுவலகம் விளக்கியது.

காவல்துறையும் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகமும் எடுத்த முடிவில் மாண்டவரின் இனமும் ஏழு தனிநபர்களின் இனமும் ஒருபோதும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் அது கூறியது.

சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகள் சமூகங்களுக்கு இடையில் மாற்றமுடியாத பிரிவை ஏற்படுத்தக்கூடும் என்பதை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை சுட்டியது.

அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராகத் தயங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்