Images
  • maid
    கோப்புப் படம்: Today 

வயது குறைவானவரைப் பணிப்பெண் வேலைக்கு அமர்த்திய நிறுவனத்துக்கு அபராதம்

மியன்மாரைச் சேர்ந்த 13 வயதுப் பெண்ணை சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு அமர்த்திய வேலை முகவர் நிறுவனத்திற்கு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய கோர் சியூ தியாங் (Khor Siew Tiang) கடந்தாண்டு ஜூலை மாதம் அந்த பதின்ம வயதுப் பெண்ணை பணிப்பெண் வேலைக்கு அமர்த்த விண்ணப்பம் செய்திருந்தார்.

அந்த விண்ணப்பப் படிவத்தில் மியன்மார் பெண்ணின் வயது 23 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிநாட்டுப் பணிப்பெண்களின் வயது குறைந்தபட்சம் 23ஆக இருக்க வேண்டும் என்பது மனிதவள அமைச்சின் விதிமுறை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனிதவள அமைச்சு அதிகாரிக்குத் தகவல் கிடைத்தது. அதன்பின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நிறுவனத்தின் உரிமையாளர் தனது தவற்றை ஒப்புக்கொண்டார்.

அந்த 13 வயதுப் பெண் மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அவர் சிங்கப்பூரில் வேலைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


உங்கள் கருத்து

Top