Images
  • overlapping port limit
    படம்: Channel NewsAsia 

சிங்கப்பூர்-மலேசியா கடல்துறை சர்ச்சை: துறைமுக எல்லை மாற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க இருதரப்பும் இணக்கம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரும் மலேசியாவும் அவற்றின் துறைமுக எல்லை மாற்றங்களைச் செயல்படுத்துவதை நிறுத்திவைக்க இணங்கியுள்ளன.

ஒன்று மற்றதன் எல்லைக்குள் ஊடுருவும் வகையில் அந்த மாற்றங்கள் அமைந்துள்ளன.

இருநாடுகளுக்கு இடையே நிலவும் கடல்துறை சர்ச்சையில் பதற்றங்களைத் தணிக்கும் நடவடிக்கையாக அது கருதப்படுகிறது.

அந்தப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை ரத்துசெய்யவும் இருதரப்பும் இணங்கியுள்ளன.

அரசாங்கக் கப்பல்கள் அங்கு நங்கூரமிட மாட்டா என்றும் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூர், மலேசியக் கப்பல்கள் அனைத்துலகச் சட்டத்திற்கு உட்பட்டு அந்தப் பகுதியில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க இருதரப்பும் இணைந்து செயலாற்றும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Top