Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்துக்கு ஏற்பட்ட நட்டத்துக்குப், பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அல்ஜுனிட் ஹவ்காங் நகரமன்ற நிர்வாகத்தில் ஏற்பட்ட நட்டத்துக்குப் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில்வியா லிம், லாவ் தியா கியாங் ஆகிய மூவருமே பொறுப்பு எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

அல்ஜுனிட் ஹவ்காங் நகரமன்ற நிர்வாகத்தில் ஏற்பட்ட நட்டத்துக்குப் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில்வியா லிம், லாவ் தியா கியாங் ஆகிய மூவருமே பொறுப்பு எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2011க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் நிர்வாக முகவராகச் செயல்பட்ட FM Solutions & Services நிறுவனத்துக்கு 33 மில்லியன் வெள்ளி செலுத்தியதன் தொடர்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

திருவாட்டி லிம்மும் திரு. லாவும் சட்டரீதியான தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டதாக, உயர்நீதிமன்றம் வெளியிட்ட எழுத்துபூர்வமான தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

நகர மன்றத்தின் நிர்வாக முகவரை நியமித்ததில் திரு. பிரித்தம் சிங் திறமையாகவும் கவனமாகவும் நடந்துகொள்ளவில்லை என்று நீதிபதி கண்ணன் ரமேஷ் குறிப்பிட்டார்.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் முறைகேடாகவும் நேர்மையற்ற வகையிலும் நடந்துகொண்டதாக நீதிமன்ற அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

செலுத்தப்பட்ட தவறான தொகைக்கு ஈடான இழப்பீட்டை அல்ஜுனிட் ஹவ்காங் நகர மன்றம் கோரியிருந்தது.

இழப்பீட்டுத் தொகையை மதிப்பீடு செய்வதில் அடுத்த கட்ட விசாரணை கவனம் செலுத்தும்.

நீதிமன்றம் குறிப்பிடும் இழப்பீட்டுத் தொகையை மூவராலும் செலுத்த முடியாமற்போனால் அவர்கள் நொடித்துப் போனவர்களாக அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடலாம்.

அத்துடன் அவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாமற்போகும் நிலையும் ஏற்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்