Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோயாளிக்கு என்ன சிகிச்சை வழங்கவேண்டும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு முடிவெடுக்கலாமா?

நோயாளி ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்யும் பொறுப்பை செயற்கை நுண்ணறிவு முறையிடம் விட்டுவிடலாமா?

வாசிப்புநேரம் -
நோயாளிக்கு என்ன சிகிச்சை வழங்கவேண்டும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு முடிவெடுக்கலாமா?

(படம்: Pixabay)

நோயாளி ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்யும் பொறுப்பை செயற்கை நுண்ணறிவு முறையிடம் விட்டுவிடலாமா?

அதுவும் அனுபவம் பெற்ற மருத்துவ ஊழியரின் கருத்தைப் பெறாமல்?

இதுபோன்ற சிக்கலான சூழலுக்கு விடைகாணப் புதிய வழிகாட்டி அறிக்கை ஒன்று அறிமுகம் கண்டுள்ளது.

சிங்கப்பூர் கணினிச் சங்கம் அந்த அறிக்கையை இன்று வெளியிட்டது.

தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அந்த வழிகாட்டி அறிக்கை உதவும்.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அறிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பின் மாதிரியைக் கொண்டு அது உருவாக்கப்பட்டது.

நிறுவனங்கள் புதிய வழக்கங்களுக்கு மாற்றியமைத்துக்கொள்ள செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் முக்கியம் என்று அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் S. ஈஸ்வரன் கூறினார்.

தொழில்நுட்ப நிபுணர்களுக்காக நடத்தப்படும் சிங்கப்பூரின் முதல் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைப் பயிற்சிக்கும் அறிக்கை அடித்தளமாக அமைகிறது.

சிங்கப்பூர்க் கணினிச் சங்கமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து அந்தப் பயிற்சித் திட்டத்தை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்