Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் பாதுகாப்பான, திறமையான விமானப் போக்குவரத்துச் சேவைகளை வழங்க சில பில்லியன் வெள்ளி செலவிடும்: போக்குவரத்து அமைச்சர்

சிங்கப்பூர், பாதுகாப்பான, திறமையான விமானப் போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து வழங்க அடுத்த வரும் ஆண்டுகளில் சில பில்லியன் வெள்ளியைச் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -


சிங்கப்பூர், பாதுகாப்பான, திறமையான விமானப் போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து வழங்க அடுத்த வரும் ஆண்டுகளில் சில பில்லியன் வெள்ளியைச் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ச்சிங்கில் நடந்த விமானத்துறை மாநாட்டில் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் அதனைத் தெரிவித்தார்.

ஆகாயவெளியை நிர்வகிப்பது லாபகரமான தொழில் நடவடிக்கை என்ற கருத்துகளை அவர் நிராகரித்தார்.

உலகிலேயே ஆகச் சிக்கலான, பரபரப்பான ஆகாயவெளிகளில் ஒன்றைச் சிங்கப்பூர் நிர்வகிக்கிறது.

அதனால்தான் விமானப் போக்குவரத்து நிர்வாகத் திறன்களில் நாடு அதிகம் முதலீடு செய்வதாக அமைச்சர் காவ் கூறினார்.

விமானப் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளதை விமானத்துறை மேம்பாடு பற்றிய மாநாட்டில் திரு. காவ் சுட்டினார்.

அதன் காரணமாக பாதுகாப்பான, திறமையான விமானப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவது மேலும் அவசியமாகிறது என்றார் அவர்.

சிங்கப்பூரின் தற்போதைய விமானப் போக்குவரத்து நிர்வாக முறை பற்றி அமைச்சர் காவ் பேசினார்.

300 மில்லியன் வெள்ளி செலவிலான அந்த முறை 2013ஆம் ஆண்டில் தான் நிறுவப்பட்டது.

எனினும் அடுத்த தலைமுறைக் கட்டமைப்பை உருவாக்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

நிர்வாக முறை காலத்திற்கேற்ப இருக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றார் அமைச்சர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்