Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலி AirPods சாதனங்கள் விற்பனை - பதின்ம வயதினர் உட்பட மூவர் கைது

சிங்கப்பூரில் Carousell இணைய வர்த்தகத்தளத்தில் போலி AirPods சாதனங்கள் விற்பனை செய்து ஏமாற்றிய சந்தேகத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
போலி AirPods சாதனங்கள் விற்பனை - பதின்ம வயதினர் உட்பட மூவர் கைது

படம்: Jeremy Long

சிங்கப்பூரில் Carousell இணைய வர்த்தகத்தளத்தில் போலி AirPods சாதனங்கள் விற்பனை செய்து ஏமாற்றிய சந்தேகத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை கூறியது.

Apple நிறுவனத்தின் AirPods என்ற பெயரில் போலியான சாதனங்கள் விற்கப்பட்டதையொட்டி, ஜூன் மாதம் 29-ஆம் தேதிக்கும் கடந்த மாதம் 24 தேதிக்கும் 4 புகார்கள் அளிக்கப்பட்டன.

விசாரணை நடத்தப்பட்டதில் மோசடிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவர் அடையாளம் காணப்பட்டதாகக் காவல்துறை சொன்னது.

அவர்களில் பதின்ம வயதினர் இருவர், இணையத்தளத்தில் பரிவர்த்தனைகளை நடத்தியதாகவும் 35 வயது ஆடவர் ஒருவர், அவர்களுக்குப் போலிச் சாதனங்களை விநியோகித்ததாகவும் நம்பப்படுகிறது.

59 போலிச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

போலி முத்திரை கொண்ட சாதனங்களை விற்பனை செய்ததாக நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு சாதனத்திற்கும் 10,000 வெள்ளி வரையிலான அபராதம், அதிகபட்சமாக 5 ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்