Images
  • airport-1
    படங்கள்: வினோத் கருப்பையா

சாங்கி விமான நிலையத்தைக் கலக்கிய கிறிஸ்துமஸ் தாத்தா

சிங்கப்பூரின் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.

தற்போது அதன் குதூகலம் சாங்கி விமான நிலையத்திலும் தொடங்கிவிட்டது.


பின்லந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் இருந்து ஃபின்ஏர் மூலம் இன்று மாலை 4.15 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்திற்கு வந்தார் கிறிஸ்துமஸ் தாத்தா.


விமான நிலையத்தில் உள்ள ஊழியர்களுடனும், பயணிகளுடனும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆடியும், பாடியும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்றார்.

சிலருக்குப் பரிசுகளையும் கொடுத்தார்.


கிறிஸ்துமஸ் தாத்தாவைக் கண்ட குழந்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

ஃபின்லந்தில் இருந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா அடுத்த நான்கு நாள்களுக்கு சிங்கப்பூரில் உள்ள சில இடங்களுக்குச் செல்லவுள்ளார்.

வரும் 7, 8 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் Millenia Walk பகுதியில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பார்க்கலாம் என்றும், பின்னர் கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் குழந்தைகளை அவர் சந்திக்கவிருப்பதாகவும் ஃபின்ஏர் நிறுவனம் தெரிவித்தது.


Top