Images

அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளைக் கையாளும் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை

அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை இனி கையாளும்.

கண்புரை, காது கேளாமை போன்ற முதியவர்களைப் பாதிக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கான சிகிச்சை முறைகள் அதில் அடங்கும்.

அதுபோன்ற அறுவை சிகிச்சைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வரும் வேளையில் மூத்தோர் தொடர்பான சிகிச்சைகளை வழங்கப் போதுமான வளங்கள் இல்லாமல் இருக்கலாம்.

அந்தக் குறையைப் போக்கப் புதிய ஏற்பாடு வகைசெய்யும் என்றது மருத்துவமனை.


மருத்துவமனை தற்போது 6 அறுவை சிகிச்சை அறைகளைக் கொண்டுள்ளது.

மாதந்தோறும் 600 அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் அங்கு நடத்தப்படலாம்.

2026ஆம் ஆண்டிற்குள் மேலும் 12 அறுவை சிகிச்சை அறைகளை அமைப்பது திட்டம்.

Top