Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Orchard Towersஇன் வெளியில் தகாத முறையில் நடந்துகொண்ட பிரபல பாடகருக்குச் சிறை, அபராதம்

இந்தோனேசியப் பிரபலத்திடமிருந்து திருடியது , Orchard Towersஇன் வெளியில் தகாத முறையில் நடந்துகொண்டது போன்ற குற்றங்களுக்காகப் பிரபல பாடகர் முகமது அலிஃப் அஸிஸுக்கு (Mohamad Aliff Aziz) இரு வாரச் சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Orchard Towersஇன் வெளியில் தகாத முறையில் நடந்துகொண்ட பிரபல பாடகருக்குச் சிறை, அபராதம்

(படம்: Instagram/aliffaziz91)

இந்தோனேசியப் பிரபலத்திடமிருந்து திருடியது , Orchard Towersஇன் வெளியில் தகாத முறையில் நடந்துகொண்டது போன்ற குற்றங்களுக்காகப் பிரபல பாடகர் முகமது அலிஃப் அஸிஸுக்கு (Mohamad Aliff Aziz) இரு வாரச் சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு வழக்குரைஞர்களால் பிரதிநிதிக்கப்பட்ட அலிஃப் கட்டாய சிகிச்சை உத்தரவுக்கு உகந்தவரா என்பதும் விசாரணையின்போது ஆராயப்பட்டது.

அதில் அலிஃபுக்கு எந்த மனநலப் பிரச்சினையும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தோனேசியப் பிரபலத்தின் ஹோட்டல் அறையிலிருந்து சுமார் 400 வெள்ளியைத் திருடியதை ஒப்புக்கொண்டார் அலிஃப்.

இந்தோனேசியாவில் எப்படி பாடகாராவது என்ற ஆலோசனை பெறும் எண்ணத்தில் ஹோட்டல் அறைக்குச் சென்றதாக அவர் கூறினார்.

ஒரு சில மாதங்கள் கழித்து Orchard Towers கட்டடத்தின் வெளியில் கூச்சலிட்டுத் தகாத முறையில் நடந்துகொண்டார் அலிஃப்.

இதற்கு முன் அலிஃப் 2014இல் மற்றொரு திருட்டுக் குற்றச்சாட்டிற்கு அபராதம் செலுத்தினார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அலிஃப், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு இழப்பீடு கொடுத்ததைத் தண்டனை விதிக்கும்போது கருத்தில் கொண்டதாக நீதிபதி கூறினார்.

திருட்டுக் குற்றச்சாட்டிற்கு அலிஃபிற்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

பொது இடத்தில் தகாத முறையில் நடந்துகொண்டதற்கு அதிகபட்சமாக ஆறு மாதச் சிறைத்தண்டனையுடன் 2,000வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்