Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காரத்தன்மையுடைய (Alkaline) குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் விற்கும் நிறுவனம் மீது சுமார் 90 புகார்கள் பதிவு

Alkaline water எனும் காரத்தன்மையுடைய குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
காரத்தன்மையுடைய (Alkaline) குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் விற்கும் நிறுவனம் மீது சுமார் 90 புகார்கள் பதிவு

(படம்: Facebook/Triple Lifestyle Marketing)

Alkaline water எனும் காரத்தன்மையுடைய குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தவறான புரிதலை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டதாகத்
Triple Lifestyle Marketing எனும் அந்த நிறுவனத்தின் மீது கடந்த ஆண்டு சுமார் 90 புகார்கள் பதிவுசெய்யப்பட்டதால், சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் (CASE) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு நிறுவனத்திற்கு தனிபட்ட முறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும், புகார்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டதாகச் சங்கம் குறிப்பிட்டது.

Triple Lifestyle Marketing நிறுவனம், காரத்தன்மையுடைய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கான நீண்ட-கால பராமரிப்புத் தொகுப்புத் திட்டங்களை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்துவருகிறது.

சுமார் 3,000 வெள்ளி மதிப்புள்ள திட்டத்துக்குப் பதிந்துகொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தண்ணீர் சுத்தகரிப்பு இயந்திரமும், அவற்றுக்கான துணைச் சாதனங்களும் வழங்கப்படுகின்றன.

தேவையேற்பட்டால், இயந்திரத்தைச் சீர்செய்யும் சேவைகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

இருப்பினும், அத்தகைய சேவைக்காகத் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் முறையான பதில் சொல்வதில்லை என்றும் பழுதான பாகங்களுக்கு மாற்றாகப் புதிய பாகங்கள் கொடுப்பதில்லை என்றும் புகார்கள் செய்யப்பட்டன.

Triple Lifestyle Marketing மீது பதிவு செய்யப்பட்ட புகார்கள் தொடர்ந்து கண்காணிப்படும் என்றும் நிறுவனம் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்