Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜனவரி முதல் தேதியிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே வேலையிடங்களுக்குச் செல்லலாம்

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து (ஜனவரி 1, 2022) முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அலுவலகம் செல்ல முடியும்.

வாசிப்புநேரம் -

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து (ஜனவரி 1, 2022) முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அலுவலகம் செல்ல முடியும்.

அதற்கு முந்தைய 270 நாள்களில் COVID-19 நோயிலிருந்து குணமடைந்தவர்களும் அலுவகலம் செல்லஅனுமதிக்கப்படுவர் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு குறிப்பிட்டது.

அலுவலகம் திரும்ப விரும்பும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் COVID-19 நோய் இல்லை என்பதை பரிசோதனை மூலம் நிரூபிக்கவேண்டும்.

அந்தப் பரிசோதனைக்கான செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

தடுப்பூசி போடாத ஊழியர்கள், சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் COVID-19 பரிசோதனையைச் செய்துகொள்ளவேண்டும்.

சிங்கப்பூர் ஊழியர்களில் கிட்டத்தட்ட 96 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

ஏறக்குறைய 113,000 ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போடுக்கொள்ளவில்லை. அவர்களில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் மூத்தோர்.

அவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் நீக்குப்போக்கான நடைமுறை போன்றவற்றை முதலாளிகள் வழங்கவேண்டும் என்று முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்புகள் வலியுறுத்தின.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்