Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நடிகர் அலோய்ஷியஸ் பாங் மரணம்: ஆயுதப் படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும்

தேசிய சேவைப் பயிற்சியின்போது நடிகர் அலோய்ஷியஸ் பாங் மரணமடைந்தது குறித்து ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுடன், சிங்கப்பூர் ஆயுதப்படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவும் விசாரணை நடத்தும்.

வாசிப்புநேரம் -
நடிகர் அலோய்ஷியஸ் பாங் மரணம்: ஆயுதப் படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும்

(படம்: MINDEF)

தேசிய சேவைப் பயிற்சியின்போது நடிகர் அலோய்ஷியஸ் பாங் மரணமடைந்தது குறித்து ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுடன், சிங்கப்பூர் ஆயுதப்படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவும் விசாரணை நடத்தும்.

அதன் கண்டுபிடிப்புகளைப் பொறுத்து சேவையாளர் யாரும் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமா என்று முடிவெடுக்கப்படும்.

பாங்கின் மரணம் குறித்து இன்று (பிப்ரவரி 11) நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அதனைத் தெரிவித்தார்.

பாங் வெளிநாட்டில் மாண்டதால் சிங்கப்பூரின் காவல்துறையோ, மரண விசாரணை நீதிமன்றமோ அதனைப் பற்றி விசாரிக்க இயலாது.

ஆனால் இராணுவச் சட்டத்தின்படி சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு அதனை விசாரிக்க உரிமை உள்ளது.

நியூசிலந்தில் நடைபெற்ற தேசிய சேவைப் பயிற்சியில் Howitzer ரகப் பீரங்கியைப் பழுதுபார்க்கும்போது 28 வயது முதல் நிலைக் கார்ப்பரல் பாங் காயமடைந்து மாண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்