Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமேஸானின் உறுப்பினர்களுக்கான சிறப்புச் சேவைகள் தொடக்கம்

இன்றிலிருந்து (டிசம்பர் 06ஆம் தேதி)அமேஸானில் உறுப்பினர்களாகச் சேர்வோர், முதல் ஒரு மாதத்துக்கு அதன் சலுகைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதி பெறுவர்.

வாசிப்புநேரம் -
அமேஸானின் உறுப்பினர்களுக்கான சிறப்புச் சேவைகள் தொடக்கம்

(படம்: Reuters)

சிங்கப்பூரில், இணைய விற்பனைத் தளமான அமேஸான், வாடிக்கையாளர்களுக்கான சிறப்புச் சேவைகளைத் தொடங்கியுள்ளது.

இன்றிலிருந்து (டிசம்பர் 06ஆம் தேதி) அமேஸானில் உறுப்பினர்களாகச் சேர்வோர், முதல் ஒரு மாதத்துக்கு அதன் சலுகைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதி பெறுவர். முன்னோட்டச் சேவையின்கீழ் அது வழங்கப்படும்.

மாதந்தோறும் 8 வெள்ளி 99 காசினை அவர்கள் உறுப்பியச் சேவைகளுக்காகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஐந்து மாதமாக அமேஸான் அதன் சேவைகளைச் சிங்கப்பூரில் வழங்கிவருகிறது.

கடந்த ஜூலை மாதம், அமேஸான் அதன் அதிவேகப் பிரைம் விநியோகச் சேவைகளை வழங்கத் தொடங்கியது.

முதல் வாரம் அதிக விண்ணப்பங்கள் குவிந்ததால் விநியோகத்தில் பிரச்சினைகள் எழுந்தது.

எனினு, நிறுவனம் இம்முறை நிலைமையைச் சமாளிக்கத் தயாராய் இருப்பதாக TODAYயிடம் தெரிவித்தது.

பிரைம் சேவைக்கு விண்ணப்பிப்போர், அமேஸான் இணையத்தளத்தில் உள்ள ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பொருட்களைப் பார்வையிடலாம்.

அத்துடன் காணொளிகள், தொலைகாட்சித் தொடர்கள் போன்றவற்றுக்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் அமேஸான் அத்தகையச் சிறப்புச் சேவைகளை வழங்குகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்