Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமேஸான் இணைய விற்பனைத் தளத்தில் சிங்கப்பூருக்கான இலவச விநியோகம் ரத்து

இணைய விற்பனைத் தளமான அமேஸான், வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களை சிங்கப்பூருக்கு இலவசமாக அனுப்பி வைக்கும் சேவையை ரத்துசெய்திருப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
அமேஸான் இணைய விற்பனைத் தளத்தில் சிங்கப்பூருக்கான இலவச விநியோகம் ரத்து

(படம்: Reuters/Carlos Jasso/Illustration/File Photo)

இணைய விற்பனைத் தளமான அமேஸான், வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களை சிங்கப்பூருக்கு இலவசமாக அனுப்பி வைக்கும் சேவையை ரத்துசெய்திருப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது.

சிங்கப்பூரில் தளம்கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் முன்பு குறைந்தபட்சம் 125 டாலருக்குப் பொருட்கள் வாங்கினால், அவற்றை அனுப்பி வைக்க அந்நிறுவனம் கட்டணம் வசூலிக்கவில்லை.

வாங்கிய பொருட்கள் Free AmazonGlobal Saver Shipping சேவை வழி இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன.

அந்தச் சேவை இனி இல்லை.

சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் அந்த இணையத்தளத்தில் இருந்து இனி பொருட்களை வாங்கினால், அவற்றை அனுப்பி வைப்பதற்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.

சேனல் நியூஸ்ஏஷியா தொடர்புகொண்டபோது, அமேஸான் தளத்தின் வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி ஒருவர் அவ்வாறு சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்