Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளை வடிவமைக்கும் மிகப் பெரிய பொறுப்பு அமெரிக்க வர்த்தகத் தலைவர்களுடையது : அமைச்சர் சான்

அமெரிக்க வர்த்தகச் சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் அவ்வாறு கூறினார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளை வடிவமைக்கும் மிகப் பெரிய பொறுப்பு அமெரிக்க வர்த்தகத் தலைவர்களுடையது : அமைச்சர் சான்

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளை வடிவமைக்கும் மிகப் பெரிய பொறுப்பு அமெரிக்க வர்த்தகத் தலைவர்களுக்கு இருக்கிறது.

அமெரிக்க வர்த்தகச் சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் அவ்வாறு கூறினார்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் அதிகரித்துவரும் வேளையில், அவரது கருத்து வெளியாகியுள்ளது. 

இந்த வட்டாரத்தில் அமெரிக்காவின் முதலீடுகள் இன்னும் அதிகமாக இருப்பதைத் திரு. சான் சுட்டினார்.

2016ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 234 பில்லியன் டாலராக இருந்தது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பூசல் தொடர்ந்தால், அது சிங்கப்பூரர்களை எப்படி பாதிக்கும் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

சிங்கப்பூர் ஒரே எண்ணம் கொண்ட சாராருடன் இணைந்து விதிமுறைகள் அடிப்படையிலான முறையை உருவாக்க முயலும்.

அதோடு, நிறுவனங்கள் பன்முகத்தன்மையுடன் செயல்பட, புதிய பங்காளிகளைக் கண்டறிந்து, அவர்களுடன் இருதரப்பு அல்லது பலதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட சிங்கப்பூர் முனையும் என்றார் திரு. சான். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்