Images
  • AMK Fire
    (படம்: Facebook/HDB)

அங் மோ கியோ தீ: ஒரு வாரத்திற்குப் பின் வீடு திரும்பிய குடியிருப்பாளர்கள்


அங் மோ கியோ சென்ட்ரலில் நேர்ந்த பெரிய தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேலானோர் வீடு திரும்பியுள்ளனர்.

சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின் அவர்கள் வீடு திரும்புவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தனது Facebook பதிவில் தெரிவித்தது.

ஜூலை 5 அன்று அங் மோ கியோ அவென்யூ 6இல் இருக்கும் புளோக் 720இன் கீழ்த்தளத்தில் பெரிய அளவில் தீ மூண்டது,

அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 28 குடும்பங்களில் 16 குடும்பங்கள் வீடு திரும்பியுள்ளன. சமையல் எரிவாயு, தண்ணீர், மின்சாரம் போன்ற சேவைகள் மீண்டும் சீர்செய்யப்பட்டுள்ளன.

இன்னும் வீடு திரும்பாத குடும்பங்களில் 10 குடும்பங்கள் நண்பர்களோடும் உறவினர்களோடும் தங்கியுள்ளன.

எஞ்சிய இரண்டு குடும்பங்கள், கழகம் ஏற்பாடு செய்த தற்காலிக இருப்பிடங்களில் தங்கியுள்ளன.

பெரிய அளவில் ஏற்பட்ட அந்தத் தீச்சம்பவத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

 

Top