Images
  • pap amk
    (படம்: People's Action Party)

பிரதமர் லீ வழிநடத்தும் அங் மோ கியோ குழுத்தொகுதியில் இரு புதுமுகங்கள் போட்டி

பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அங் மோ கியோ தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை, மக்கள் செயல் கட்சி அறிவித்துள்ளது.

Facebook நேரலை மூலம், கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு. லீ, அது பற்றி அறிவித்தார்.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் இருவர் புது முகங்கள்.

அவர்களில் ஒருவர் வழக்குரைஞர் நாடியா அஹ்மது சம்தின் (Nadia Ahmad Samdin).

இரண்டாமவர், பொதுத்துறை முன்னாள் ஊழியர் இங் லிங் லிங் (Ng Ling Ling).

2015 இல் இருந்து அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள திரு. கான் தியாம் போவும் (Gan Thiam Poh), திரு. டேரல் டேவிட்டும் (Darryl David) பிரதமர் தலைமையிலான புதிய அணியில் தொடர்கின்றனர்.

ஆறு பேரைக் கொண்ட அங் மோ கியோ குழுத்தொகுதி, தற்போது ஐவர் களமிறங்கும் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.  

Top