Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அங் மோ கியோ நகர மன்ற முன்னாள் பொது மேலாளர் மீது 55 ஊழல் குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூர்: அங் மோ கியோ (Ang Mo Kio) நகர மன்ற முன்னாள் பொது மேலாளர் வோங் சீ மெங் (Wong Chee Meng) மீது 55 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
அங் மோ கியோ நகர மன்ற முன்னாள் பொது மேலாளர் மீது 55 ஊழல் குற்றச்சாட்டுகள்

(படம்: CNA/Winnie Goh)

சிங்கப்பூர்: அங் மோ கியோ (Ang Mo Kio) நகர மன்ற முன்னாள் பொது மேலாளர் வோங் சீ மெங் (Wong Chee Meng) மீது 55 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இரண்டு கட்டடக் கட்டுமான நிறுவனங்களின் இயக்குநரும் பங்குதாரருமான திரு சின் சின் லானிடமிருந்து (Chia Sin Lan) திரு. வோங் $100,000க்கும் அதிகமாக இலஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதற்குப் பதிலாக, திரு சியாவின் நிறுவனங்களுக்கு உகந்த வர்த்தக வாய்ப்புகளை, அங் மோ கியோ நகர மன்றத்தின் பேரில் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

திரு. வோங்குக்கு லஞ்சம் கொடுத்ததாக திரு. சியா மீதும், அவருடைய நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளில் திரு. வோங்Wong கேளிக்கைக் கூடங்களில் பொழுதைக் கழிக்க திரு. சியா சுமார் $50,000 செலவழித்தார்.

திரு. வோங்கின் கள்ளக் காதலிக்கு $30,000, அவருடைய மருமகளுக்கு வேலை கிடைக்கவும் திரு. சியா உதவினார்.

கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்