Images
  • AMK theft
    படம்: TODAY/Kimberly Lim

அங் மோ கியோ நகைக் கடையில் கொள்ளை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அங் மோ கியோவில் உள்ள நகைக் கடையொன்றில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அதன் தொடர்பில் சந்தேக நபரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 574இல் அந்தச் சம்பவம் இன்று மாலை நடந்தது. சந்தேக நபர் 100,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளைக் களவாடித் தப்பிச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை என்றும் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் கருப்பு நிறத் தலைக்கவசத்தை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. நீல மேலாடையுடன் கருப்பு முழுக்கால் சட்டையும் அணிந்திருந்தார். அவர் கருப்புப் பை ஒன்றையும் வைத்திருந்தார்.

சம்பவம் குறித்த விவரங்களைத் தெரிவிக்க 1800-255-0000 என்ற எண்ணை அழைக்கலாம்.


Top