Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்தோனேசியாவின் முன்னாள் தலைமகள்

இந்தோனேசியாவின் முன்னாள் தலைமகள் அணி யுதோயோனோ (Ani Yudhoyono) இரத்தப் புற்றுநோய் காரணமாக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்தோனேசியாவின் முன்னாள் தலைமகள்

(படம்: Twitter/Agus Yudhoyono)

இந்தோனேசியாவின் முன்னாள் தலைமகள் அணி யுதோயோனோ (Ani Yudhoyono) இரத்தப் புற்றுநோய் காரணமாக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமது மருத்துவக்குழுவின் ஆலோசனைப்படி, தமது மனைவியை சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து வந்ததாக, டாக்டர் சுசிலோ பாம்பாங்க யுதோயோனோ (Susilo Bambang Yudhoyono) தெரிவித்தார்.

திருமதி. அணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக அவர் சொன்னார்.

அவர் விரைவில் குணமடைய பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong), துணைப்பிரதமர் தியோ சீ ஹியன் (Teo Chee Hean) ஆகியோர் அவருக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்துள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) திருமதி. அனியை கடந்த வியாழக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்