Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மரண தண்டனைக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட சட்டையை அணிந்த இருவர்மீது விசாரணை

மரண தண்டனைக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட சட்டையை அணிந்து மஞ்சள் நாடா ஓட்டத்தில் கலந்துகொண்ட இருவரைக் காவல்துறை விசாரித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
மரண தண்டனைக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட சட்டையை அணிந்த இருவர்மீது விசாரணை

(படம்: Facebook/Nafiz SerbaBoleh)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

மரண தண்டனைக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட சட்டையை அணிந்து மஞ்சள் நாடா ஓட்டத்தில் கலந்துகொண்ட இருவரைக் காவல்துறை விசாரித்து வருகிறது.

முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வளிப்பதை ஆதரிக்கும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடந்த ஓட்டத்தில் 38 வயது ஆடவரும் 30 வயது பெண்ணும் அந்தச் சட்டைகளை அணிந்து நிகழ்வில் கலந்துகொண்டனர்.

"#antideathpenalty" என்ற hashtagஉம் சட்டைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்களுக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இருவரும் அந்தச் சட்டைகளை அணியவிருந்ததாக ஏற்பாட்டாளர்களுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தகவல் கிடைத்தது.

முதலில் சட்டைகளை மாற்ற மறுத்தவர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) சட்டைகளை மாற்றுவதாக ஒப்புக்கொண்டனர்.

ஆனால் ஓட்டத்தின்போது அந்தச் சட்டைகளை அவர்கள் அணிந்து வந்தனர்.

இருவரும் ஓட்டத்தைத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டதாய் ஏற்பாட்டளர்கள் கூறினர்.

முறையான உரிமமின்றிப் பொது இடத்தில் கூடுவதோ ஊர்வலத்தில் கலந்துகொள்வதோ குற்றம் என்று காவல்துறை தெரிவித்தது.

சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்த விரும்புவோர் முறையாகப் பேச்சாளர் சதுக்கத்தில் கூடித் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று காவல்துறை கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்